சூரியுடன் கவர்ச்சி நடனம் ஆடுகிறார் சன்னி லியோன்!

532

கனடா நாட்டின் நீலப்பட நடிகை சன்னி லியோன். தற்போது இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஆடியும், ஓட்டல்களில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டும் நித்தம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையில் வடகறி படத்தில் ஜெய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுவிட்டார். இப்போது இன்னொரு படத்திலும் அவர் ஆடப்போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இதில் ஒரு ராஜாவாக விமலும், இன்னொரு ராஜவாக சூரியும் நடிக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் போட்டியில் குதிக்கும் இவர்கள் ஒரு நாள் இண்டர்நெட்டில் சன்னியின் நீலப்படத்தை பார்க்கிறார்கள். அவரை ஊர் திருவிழாவில் ஆட வைக்கிறேன் என்று சவால் விடுவாராம் சூரி, எங்கள் ஊரில் ஆட வைக்கிறேன் என்ற சவால் விடுவாராம் விமல். இருவரும் போட்டிபோட்டு அழைக்க இரு ஊரிலும் குத்தாட்டம்போட்டுவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம் சன்னி. இப்படி ஒரு பாட்டு சூழ்நிலையில், சன்னி விமல், சூரி இருவருடனும் ஆடுவதாக பேசப்படுகிறது. இதற்காக சன்னிக்கு 30 லட்சம் வரை சம்பளம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
“சன்னி ஆடுவது உறுதியாகவில்லை. முதல்கட்ட பேச்சு வார்த்தையில்தான் இருக்கிறது. அவர் பெரிய அளவில் சம்பளம் கேட்கிறார். அதனால் அவர் ஆடுவது உறுதியாகவில்லை” என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
SHARE