சூர்யாவை அடித்தாரா பாலா.. வணங்கான் பிரச்சனை பற்றிய உண்மையை சொன்ன தயாரிப்பாளர்

32

 

நடிகர் சூர்யாவின் கெரியரில் ஆரம்பகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்தவர் பாலா. பல வருடங்களாக அவர்கள் கூட்டணி சேராமல் இருந்த நிலையில் வணங்கான் என்ற படத்திற்காக சேர்ந்தனர்.

ஆனால் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்தபிறகு சூர்யா படத்தில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அதற்கான காரணத்தை சூர்யா தெரிவிக்கவில்லை. அதனால் பல்வேறு செய்திகள் அது பற்றி கிசுகிசுக்கப்பட்டன.

சூர்யாவை அடித்தாரா பாலா?
சூர்யாவை பாலா அடித்தார் என்றெல்லாம் செய்திகள் பரவிய நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்திருக்கும் பேட்டியில் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

“பாலா சூர்யாவை அடித்தார் என்பது துளி கூட உண்மை இல்லை, ஆனால் அவரை வெறும் கால் உடன் ஓட விட்டார் என்பது உண்மையாக இருக்கலாம்” என கூறி இருக்கிறார்.

 

SHARE