சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – ஜனாதிபதி

589

rajapaksaசூழ்ச்சித் திட்டங்கள் குறித்து தொழிலாளர் தோழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உழைக்கும் வர்க்கத்தினரின் மிக முக்கியமான தினமான மே தினத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் சுதந்திரமானதும், ஜனநாயகமானதுமான முறையில் மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கக் கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் நிலையான அபிவிருத்தியை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த சிந்தனைக் கொள்ளைகளின் அடிப்படையில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பண வீக்க வீதம் தனி இலக்க பெறுமானத்தில் பேணப்பட்டுள்ளதாகவும், இது தொழிலாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு ரீதியலும் சர்வதேச ரீதியிலும் எழக் கூடிய சவால்களை முறியடிப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு அவசியமானது என ஜனாதிபதி மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE