சென்னை விமான நிலையத்தில் பறக்கத் தயாராகும் விமானங்கள்.

307

 

Canni

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை (5-ம் தேதி) விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில், தாம்பரம், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஒருமாடி அளவுக்கு தேங்கி உள்ளது.

இதனால், பொதுமக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மின்சாரமும் தடைபட்டால் மேலும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால், பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல், சென்னை விமான நிலையத்திலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், கடந்த 2-ம் தேதி முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் இயக்கப்படவில்லை. இதனால் விமானிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இதையடுத்து, இன்று (4-ம் தேதி) முதல் அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் இருந்து 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ”சென்னை விமான நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை (5-ம் தேதி) முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்படும்” என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE