சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதா-சசிகலாவின் மனு தள்ளுபடி

504
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்களின் சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

எங்கள் மீதான புகாரை விசாரணை நடத்துவதற்காக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் நியமனம் செய்யப்பட்ட நல்லம்ம நாயுடுவுக்கு புகாரை விசாரணை நடத்த மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. எங்கள் சொத்துகளை முடக்கவோ அல்லது வழக்கில் சேர்க்கும் அதிகாரமோ அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே, அவரால் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

சொத்துக்களை விசாரணை அதிகாரி முடக்கியது சரிதான் என்றும், விசாரணை அதிகாரியான நல்லம நாயுடுவுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது என்றும் கூறியுள்ள நீதிபதி, சொத்துக்களை முடக்கியது தொடர்பான அடிப்படை கேள்வி தற்போது எழுதுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE