ஜனாதிபதியின் வீட்டில் சமைப்பது அவரது மனைவி!-சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

503

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருக்கு நெருக்கமான பெண் மருத்துவர் ஒருவர் அண்மையில் தெராலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகியுள்ளதை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அந்த மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

சிறிது நேரம் ஜனாதிபதியுடன் உரையாடிய பின்னர், ஜனாதிபதியின் மனைவியிடம் பேச மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மனைவியுடன் இந்த நேரத்தில் பேச முடியாது எனவும் அவர் சமையலறையில் மதிய உணவை தயார் செய்து கொண்டிருப்பார் எனவும் கூறியுள்ளார்.

908 update-from-the-farm-dec-11-3

ஜனாதிபதியின் இந்த பதிலை கேட்டு பிரபல அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் மருத்துவர் கடும் ஆச்சரியமடைந்துள்ளதுடன் வீட்டில் வேலை செய்ய எவரும் இல்லையா என ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.

எமது வீட்டு வேலைகளை நாங்களே செய்து கொள்வோம். எனக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கு மனைவிதான் சமைப்பார் எனவும் சமையலுக்கு தேவையானவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

SHARE