ஜப்பான் கூட்டு தயாரிப்பில் தமிழ் 3 டி படம் 

378

 

 ரஜினியின் ‘முத்து, ஸ்ரீதேவியின் ‘இங்லிஷ் விங்லிஷ் படங்கள் ஜப்பானில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் படங்களின் வெளிநாட்டு சினிமா வர்த்தகத்தில் இப்போது ஜப்பானும் இடம்பிடித்திருக்கிறது. இதில் தமிழ் திரையுலகினர் கவனம் திரும்பி இருக்கிறது. இதை குறிவைத்து ‘ஜம்போ 3டி தமிழ்படம் ஜப்பானில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் ஹரி-ஹரிஸ் கூறியது:விரைவில் வரவிருக்கும் ‘ஆ திகில் படத்தின் ஒரு சில காட்சிகளை ஜப்பானில் படம் பிடிக்கச் சென்றபோது டோக்கிய திரைப்பட விழா ஜூரி உறுப்பினரை சந்தித்தேன். தமிழ் படங்களை ஜப்பான் ரசிகர்கள் விரும்பி பார்ப்பதை அவர் தெரிவித்தார்.இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் தொடங்கும் ஒரு சம்பவம் ஜப்பான் வரை தொடரும் கதையாக 3டியில் உருவாகிறது ‘ஜம்போ. சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன் படங்களைப்போல் இது நகைச்சுவை படம். கோகுல் ஹீரோ. பேபி ஹம்சிகாஹரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீவித்யா இசை. ஜி.சதீஷ் ஒளிப்பதிவு. தயாரிப்பு ஹரி, ஒக்கிடா (ஜப்பான்). இந்திய- ஜப்பான் நாடுகளின் கூட்டு தயாரிப்பாக உருவாகும் இதன் 90 சதவீத படப்பிடிப்பு ஜப்பானில் நடக்கிறது.

 

SHARE