ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 397 ரன்கள் சேர்ப்பு

370
தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து நிதானமாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றும் மந்தமாக பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 158.3 ஓவர்களில் 397 ரன்கள் (சராசரி 2.50) சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பிளிஸ்சிஸ் 98 ரன்களும், குயின்டான் டீ காக் 81 ரன்களும், டுமினி 55 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஜான் நிம்பு 5 விக்கெட்டுகளை சாய்த்தார். டெஸ்டில் ஜிம்பாப்வே அறிமுக பவுலர் ஒருவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 2-வது முறையாகும். அடுத்து 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது

SHARE