ஜெயக்குமாரியின் வாழ்க்கை கடினமானது. அவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் போரின்போது இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

445
பூஸா முகாமிலுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்- 4 வின் நேர்காணல் தொடர்பாக விசாரணை
கிளிநொச்சி, தர்மபுரத்தில் கடந்த மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியிடம் சனல்-4ற்கு அளித்த நேர்காணல் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி, கைது செய்யப்படுவதற்கு முன் பின்தொடரப்படுவதாகவும் என்றும் அச்சுறுத்தப்படுவதாகவும் பிரிட்டனின் சனல் 4 ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.

இவர் கைது செய்யப்பட்டதன் பின்பு சனல் 4 ஊடகம் அந்த நேர்காணலை வெளியிட்டிருந்தது இந்நேர்காணல் தொடர்பிலே ஜெயக்குமாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சனல் 4 ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெயக்குமாரியின் வாழ்க்கை கடினமானது. அவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் போரின்போது இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இரண்டாவது மகன் இறுதிக் கட்டப் போரின் போது சாவடைந்திருந்தார். மூன்றாவது மகன் மகிந்தன் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுடன் இணைந்து போரின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார்.

ஜெயக்குமாரி தனது சரணடைந்த மகனைத் தேடித்திரிந்த வேளையில் அவரது மகனின் புகைப்படம் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட புத்தகத்தில் இருந்தது.

இதன் பின்னர் அவர்கள் தமது மகனை விடுவிக்குமாறு கோரி எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்திருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில் ஜெயக்குமாரி சனல் 4 ஊடகத்துக்கு நேர்காணல் வழங்கியிருந்தார் அதில் அவர் இனந்தெரியாதோரால் தான் பின்தொடரப்படுவதாகவும், அச்சமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர்கள் யாரையும் தனக்குத் தெரியாது என்றும் இந்த நேர்காணலை சனல் 4 ஊடகத்துக்கு முழு மனதுடனேயே வழங்குகின்றேன் என்று அவர் கூறியிருந்தார்.

இவரது 13 வயது மகள் விபூஷிகா தற்போது  சிறுவர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE