ஜெர்மனி வீரர் குளூஸ் 16 கோல் அடித்து சாதனை

447

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார்.

அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். பிரேசிலுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 23–வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பையில் குளுஸ் 16 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். ஏற்கனவே அவர் கானாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்து இருந்தார்.

4 உலக கோப்பையில் (2002, 2006, 2010, 2014) விளையாடி அவர் 16 கோல் அடித்து சாதனை புரிந்து உள்ளார். ரொனால்டோ 15 கோலில் 2–வது இடத்தில் உள்ளார்.

 

SHARE