ஜே.வி.பினருக்கு மூளையில்லை: ஆளும் கட்சி எம்.பி கிண்டல்

528

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு ஜே.வி.பிக்கு மூளையில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளதாரம் தெளிவான முன்னேற்றமடைந்துள்ளது. இதனை இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எனினும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஜே.வி.பி வேண்டும் என்றே முட்டாள்த்தனமாக வாதங்களை முன்வைத்து வருகிறது.

இலங்கையில் மாத்திரமல்ல உலகில் எங்கும் மத்திய வங்கியை அரசியல் மயப்படுத்த முடியாது. உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமையவே அந்த வங்கிகளின் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஜே.வி.பி கூறுவது போல் மத்திய வங்கியின் அறிக்கையை அரசாங்கத்தினால் மாற்ற முடிந்தால், புள்ளிவிபர திணைக்களத்தில் இருப்பவர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு சார்பானவர்களாக இருக்க வேண்டும்.

அப்படி நடக்காது என்று அடி முட்டாளை தவிர சிறுபிள்ளை கூட அறியும். நாடு இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் முன்னேறியுள்ளது என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.

இதன் காரணமாகவே அந்த கட்சி அரசாங்கத்தின் மீது சேறுபூசி வருகிறது எனவும் ரஞ்சித் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE