ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை – அஜித் ரோஹண

413

ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை – அஜித் ரோஹண

பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் கலபொடத்தே ஞானசார தேரர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கலபொடத்தே ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியமைக்கான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் போது ஞானசார தேரர் வன்முறைகளைத் தூண்டியமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை ஏன் கைது செய்யவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் அடிப்டையில் நபர்களை கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், கலபொடத்தே ஞானசார தேரர் கடந்த 15ம் திகதி அலுத்கம பிரதேசத்தில் ஆற்றிய கடுமையான உரை யூடியுப்பில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் அவரது உரையை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE