டி20 உலக கோப்பையில் இந்த வீரரை இந்தியா எடுக்க வேண்டும்: ஜாம்பவான் முரளிதரன் கருத்து

115

 

கும்பிளே, அஸ்வினை தொடர்ந்து பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி வருவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கும்பிளே, அஸ்விபிளே வரிசையில்
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய்(23), 2022ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியின் போது இந்திய அணிக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட ரவி பிஷ்னோய் தேர்வு செய்யபட்டார்.

இதன் மூலம் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை குவித்து தொடர் நாயகன் விருதையும் ரவி பிஷ்னோய் பெற்றுள்ளார்.

முரளிதரன் வாழ்த்து
கும்பிளே, அஸ்வினை தொடர்ந்து ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்படுகிறார், என 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாம்பவான் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி தங்களது அடுத்தடுத்து சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கி கொண்டே வரும்.

அதைப்போல் கும்பிளே, அஸ்வினை தொடர்ந்து தற்போது ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்படுகிறார், லெக் ஸ்பின் பவுலர்களில் இருந்து ரவி பிஷ்னோய் முற்றிலும் வேறுபடுகிறார், எனவே டி-20′ உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரவி பிஷ்னோய் சேர்க்க பட வேண்டும் என முரளிதரன் தெரிவித்துள்ளார்.

SHARE