டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்

421
கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளஞைர்கள் கடத்தப்பட்டு காசா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கு இதில் பங்கிருப்பதாகக் கருதிய இஸ்ரேலிய அரசு அவர்கள் மீதான தாக்குதலைத் தொடங்கியது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்தத் தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இருதரப்பிலிருந்தும் நடைபெற்றுவரும் ஏவுகணைத் தாக்குதல்களில் ஒன்று கடந்த வாரம் டெல் அவிவ் விமான நிலையத்தின் அருகே விழுந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இஸ்ரேலுக்கான தங்களின் விமான சேவைகளை ரத்து செய்தன.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை கண்டனம் செய்த இஸ்ரேல் நடுவானில் நடைபெற்ற தாக்குதலின்பொது சிதறிய பாகமே விமான நிலையத்தின் அருகில் விழுந்தது என்று தெரிவித்தது. தங்களது இரும்பு டோம் பாதுகாப்பு நடவடிக்கைகளினால் பென் குரியன் விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்றும், விமான தள செயல்பாடுகளும் முன்னெச்சரிக்கை கருதி சுருக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வார ஆரம்பத்தில் அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் இஸ்ரேலுக்கான தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கியது.மேலும், ஜெர்மனியின் போட்டி விமான நிறுவனங்களான லுப்தான்சா, ஏர் பெர்லின் ஆகிய நிறுவனங்களும் இன்று தங்களது சேவைகளைத் துவக்குவதாக தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளன.

சமீபத்திய தகவல் அறிக்கைகளின்படியும், தங்களின் சுய மதிப்பீட்டின்பேரிலும் உள்ளூர் பாதுகாப்பு நிலைமைகள் ஆராயப்பட்டதன் முடிவில் இன்று முதல் லுப்தான்சா சேவைகள் தொடங்கப்படும் என்று இந்த நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

SHARE