டொரண்டோவில் கடுமையான குளிர் – பொதுமக்களுக்கான அறிவிப்பு

41

டொரண்டோவில் கடுமையான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெப்பநிலை மறை ஒரு பாகை (-10C) செல்சியஸ் அளவில் நிலவும் எனவும், அந்த வெப்பநிலையானது குளிர் காற்றுடனான வானிலையினால் மறை ஐந்து முதல் மறை எட்டு பாகை செல்சியஸ் அளவிலானன கடுங்குளிரை உணரச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டொரண்டோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை | Coldest Daytime High Of The Season Toronto

இன்று காலை வெப்பநிலை மறை 5.6 செல்சியஸ் பாகையாக காணப்பட்டது. கடந்த 20 ஆம் திகதியும் இதே விதமாக மறை 5.6 செல்சியஸ் பாகை அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இந்தக் காலப்பகுதியில் அதிக கூடிய வெப்பநிலையாக 4.3 பாகை செல்சியஸாக அமையும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டொரண்டோவில் கடும் குளிர் குறித்து எச்சரிக்கை | Coldest Daytime High Of The Season Toronto

 

காலநிலை தொடர்பான குறிகாட்டிகளில் குறிப்பிடப்படும் அளவுகளை விடவும் கடுமையான குளிர் இந்த காலப்பகுதியில் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று இரவு 20 முதல் 30 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

டொரன்டோவில் நிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக வீடற்றவர்களுக்கு உதவும் நோக்கில் விசேடமாக மூன்று வோர்மிங் சென்டர்ஸ் அல்லது கதகதப்பான நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE