டோக்கியோ ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா-காரா பிளாக் மீண்டும் சாம்பியன்

644

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி பட்டம் வென்றது.

நடப்பு சாம்பியனான சானியா மிர்சா(இந்தியா)- காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்பின்-கார்லா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி 15 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் சானியா-காரா ஜோடி 6-2, 7-5 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரேசில் பார்ட்னர் புருனோ சோரசுடன் இணைந்து பட்டம் வென்ற சானியா, இப்போது டோக்கியோவிலும் பட்டம் வென்றிருக்கிறார். இது ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் அவரது முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

ஆசிய போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண் அல்லது சாகத் மைனேனி ஆகியோருடன் இணைந்து விளையாடும் சானியா, பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது

SHARE