தங்கம் விலை பற்றிய அதிரடி அறிவிப்பு

59
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. இதற்கமைய,சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 1620 டொலர் மற்றும் 1580 டொலர்களாக பதிவாகியுள்ளளது.
எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் பிரச்சினை, பணவீக்கம், சர்வதேச அளவில் நிலவி வரும் பல அரசியல் பதற்றங்கள் என்பன சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ரூபாவின் மதிப்பு மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் மந்த நிலைக்கு மத்தியில், பணவீக்கம் தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் எனவும், எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 2 வருட சரிவில் காணப்படுகின்றது. தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க இது சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகின்றதாக ரிலிகேர் புரோக்கிங் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இது முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம் எனவும், விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. – ada derana
SHARE