தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது.

862

அமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவரை சங்கடபடுத்தி வருகிறது. குறிப்பிட்ட காலநேரத்தில் வரக்கூடிய, தொழில் பக்தி உள்ள நடிகை என பெயர் எடுத்த அமலா பால் மீது ஒரு தெலுங்கு பட நிறுவனம் ஒன்று அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே கூறவில்லை என்றும் அதனால் அவர் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. அமலாபாலுக்கு இந்த குற்றசாட்டு அதிர வைத்து உள்ளது.

இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதிலிருந்து..

என்னை பற்றி புகார் கூறியுள்ள நிறுவனம் என்னை முதலில் தொடர்புக் கொண்டபோது மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள காலகட்டத்தில் 45 நாட்கள் ஒதுக்கவேண்டும் என்றுகூற, நானும் அதற்கு உட்பட்டு அத்தாட்சியாக ஒரு பத்திரத்திலும் நாங்கள் பரஸ்பரம் கையெழுத்திட்டுக் கொண்டோம்.

படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்ப்பு கொள்ள பல்வேறு முறைகளில் முயற்சி செய்தேன். அவர்கள் தொடர்பில் வந்தாலும் திருப்திகரமான பதில் வரவில்லை. திரை உலகில் இது சகஜம் என்று நானும் என்னுடைய மற்ற பட வேலைகளின் இடையே இவர்களுக்கும் திகதி கொடுக்க அணுகியபோதும் இப்போது, அப்போது என்று திடமில்லாத பதிலே வந்தது.

வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றால் என்னுடைய பாஸ்போர்ட் உட்பட என்னுடைய உதவியாளர் பாஸ்போர்ட் வரை விசாவுக்காக சமர்பிக்கவேண்டும் என்பதே விதி. ஆனால் இதுவரை வெளி நாட்டில் படமாக்க போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதே அவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு அத்தாட்சி.

இந்த நிலையில் நான், என்னுடைய திருமணத்தை பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றசாட்டு என்னை காயப்படுத்துகிறது. நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே. இதில் ஜூன் மாதம் நடைபெற வேண்டிய திருமணத்தை பற்றி அவர்களுக்கு கூறவேண்டிய அவசியம் என்ன?

கூறப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பலவேறு உண்மையான காரணங்கள் இருக்க என் திருமணத்தை சுட்டி காட்டி அவர்கள் புழுதி இறைப்பது அநாகரீகமானது. திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், எனக்கும் அப்படிதான்.

தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமண சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது. நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை, இருக்கவும் மாட்டேன். இந்த விளக்க உரைகூட யாரையும் குற்றம்சாட்டவோ, குறை கூறவோ இல்லை. என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதுதான் என்று கூறியுள்ளார்.

SHARE