நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது, விதிக்கப்படும் அபராத தொகை குறைவாக உள்ளதால் தண்டனை சட்டக்கோவையை திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
அதன்படி, புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், தண்டனை சட்டக்கோவை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.