தனுஷ்க மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ்

120
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 கைவிடப்பட்டுள்ளன.

32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சிட்னி நீதிமன்றத்தில் 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் இன்று (18) வாபஸ் பெற்றதாக கூறப்படுகின்றது. – ada derana

SHARE