தனுஷ்-அக்ஷரா பற்றி அமிதாப் கமென்ட் 

455

 

னுஷ், அக்ஷரா  தன்னுடன் எப்படி பழகுகின்றனர் என்பதற்கு பதில் அளித்தார் அமிதாப் பச்சன்.பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் புதிய இந்தி படத்தை ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘ராஞ்சனா படத்துக்கு பிறகு இந்தியில் தனுஷ் நடிக்கும் படம் இது. மாற்றுதிறனாளி வேடம். ஜோடியாக கமலின் 2வது மகள் அக்ஷரா ஹாசன் அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் நீலகிரியில் நடக்கிறது. இதுபற்றி அமிதாப்பச்சன் தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ‘தனுஷ், அக்ஷரா என்னுடைய சக நடிகர்கள். ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்களது நடிப்பு திறமையும், உணர்வுகளும் தென்னிந்தியாவுக்கே உரிய ஒழுக்க நெறிமுறைகளுடன் அமைந்திருக்கிறது. அவர்களைப் பற்றி என் மனதில் எழுந்திருக்கும் எண்ணம் இதுதான். அவர்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் எனக்கு தெரியவில்லை. இன்னும் நன்கு பழகும் சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி நிறைய சொல்ல வாய்ப்பு கிடைக்கும். ஜோக், விளையாட்டு என்று பொழுதுபோக்குடன் ஷூட்டிங் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அனுபவித்துக் கொண்டி ருக்கிறேன் என்று அமிதாப் குறிப்பிட்டிருக்கிறார்.

 

SHARE