தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை ரணில் சந்திப்பார்

503
images (5)

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி திரட்டும் நோக்கில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் வோட்டர் கேட் ஹோட்டலில் செனட்டர் ஜோன் மெக்கேன் மற்றும் அரச சார்பற்ற பிரதிநிதிகளை ரணில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரை நடாத்தவே அமெரிக்கா செல்வதாக ரணில் அறிவித்திருந்தார்.

ஆய்வு நோக்கமொன்றிற்காக செல்வதாக அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டும் புலி ஆதரவு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ரணில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 

SHARE