தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்

264

 

தமிழ் தேசியத்திர்க்குள் பின்கதவால் வந்து.தேர்தலில் படுதோல்வியடைந்து. பின்கதவாலே சென்ற யாழ்ப்பாண வணிகர்கழகத்தின் சரவாதிகார தலைவரின் இரட்டை வேடம் அம்பலம்…………..
எதிர்க்கவும் இல்லை : ஆதரிக்கவும் இல்லை – வணிகர்கள் சுயாதீனமாக முடிவெடுக்கலாம் என்கிறார் ஜெயசேகரம்!!

14359264_1587431351559500_8702659701912612267_n 14448805_1587431318226170_8153856021861719535_n-1
தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள “எழுகதமிழ்” நிகழ்வை யாழ். வணிகர் கழகம் எதிர்க்கவுமில்லை அதே நேரம் ஆதரிக்கவுமில்லை என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் த.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள “எழுகதமிழ்” நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் வர்த்தக நிறுவனங்களை மூடி நிகழ்வுக்கு ஆதரவு தருமாறு ஏற்பாட்டாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு.அன்றைய தினம், முழு அடைப்பு போல கடைகளைப் பூட்டுமாறு கேட்க முடியாது, அது வணிகர்களின் சுய முடிவுக்கு விடப்பட்டுள்ளது. யாழ். வணிகர் கழகம் நிகழ்வை ஆதரிக்கவும் இல்லை, அதனை எதிர்கவும் இல்லை என்றார்.

அதேவேளை இந்த வணிகர்கழக தலைவர் ஜெயசேகரன் எதிர்வரும் உள்ளுராட்ச்சி சபை தேர்தலில் யாழ் மாநகரசபை வேட்பாளராக நியமனம் பெறுவதர்க்காக நயவஞ்சகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை இரகசியமான முறையில் தனது வீட்டில் அழைத்து.வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களை இரபோசனத்திர்க்கு வருமாறு அழைத்துவிட்டு சுமந்திரன் எம்பியுடன் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையில் புத்திஜீவிகளை “எழுக தமிழ்”நிகழ்ச்சியை நடத்தகூடாது என்று அச்சுறுத்தியும் உள்ளார்.சுமந்திரன் எம்பி முன்னிலையில். ஜெயசேகரன் தன்னை ஒரு பெரிய மனிதராக காட்ட முயன்று மூக்குடைபட்டார் .ஆனால் எந்த அச்சுறுத்தலுக்கும் மசியாத பேரவை புத்திஜீவிகள் தாங்கள் நடத்தியே தீருவோம்.என்று ஒற்றை சொல்லி முடித்துவிட்டார்கள்.
இது ஒரு கதை!

இன்னும் ஒருகதை………………
ஒன்றும் செய்ய முடியாது மூக்குடைபட்ட ஜெயசேகரன் தமிழ் மக்கள் பலம். தமிழ் மக்கள் பேரவையுடன் அறிந்து நேற்றுமுன் தினம் கடந்த 13 வருடமாக இவர் சர்வாதிகாரமாக நடாத்தும் வணிகர் கழத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் விருப்பத்திர்க்கு மாறாக ரூபா பத்தாயிரம் ஒவ்வொரு நிர்வாகசபை உறுப்பினர்களும் செலுத்த வேண்டும் என அவர்களின் கடைகளுக்கு வணிகர்கழக ஊழியர்களை அனுப்பி எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று .தன்னிச்சையான முடிவில் வற்புறுத்தி கேட்டுவருகிறார்.ஆனால் ஏற்பாட்டு குழுவோ பணம் கேட்கவில்லை கடைகளை பூட்டி ஏனைய வர்த்தக சங்கங்களை போன்று ஆதரவளிக்குமாறு மட்டுமே கேட்டுகொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. ஆனால் இந்த ஜெயசேகரம் நீண்டகாலமாக பல அப்பாவி வர்த்தகர்களிடம் ஏமாற்றி பணம் பறித்து வணிகர் கழத்தினால் கல்வி வளரச்சிக்கு மக்களின் வழாவாதார உதவிகென வர்த்தகரகளிடம் பணம் பெற்று தான் உதவி செய்வது போன்று அரசியலில் மேடைகளை மக்களை ஏமாற்ற முனைந்து கடந்த மாகணசபை தேர்தலில் படுதோல்வியடைந்தவர். ஆதேவேளை சுமந்திரன் எம்பியோ மக்கள் எழுச்சி பிழையாக உருவகப்படுத்தப்பட்டால் அரசியல் தீர்வுக்கு ஆபத்து பொய்யான பரப்புரை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றார்.

SHARE