தயாரிப்பாளரிடம் இயக்குனருக்கு நல்ல பெயரே கிடைக்காது: ராஜா வருத்தம் 

414
 தயாரிப்பாளர் தந்தையாக இருந்தாலும் அவரிடம் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது என்றார் டைரக்டர் ராஜா. நிகில், சுவாதி நடித்துள்ள படம் கார்த்திகேயன். எம்.சந்து டைரக்ஷன் செய்கிறார். வெங்கட ஸ்ரீனிவாஸ் தயாரிக்கிறார். சேகர் சந்திரா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஜெயம் ராஜா பேசும்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது பட இயக்குனரை பாராட்டினார். எப்போதுமே தயாரிப்பாளரிடம் அப்படத்தின் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது. செலவு இழுத்துவிட்டார்கள், ஷூட்டிங் டிலே அப்படி இப்படி என்று ஏதாவது ஒரு குறை சொல்வார்கள்.
தயாரிப்பாளர் தந்தையாகவே இருந்தாலும் அவரிடமும் இயக்குனர் நல்ல பெயர் வாங்க முடியாது. ஆனால் இங்கு தயாரிப்பாளர் இயக்குனரை பாராட்டியபோது சந்தோஷமாக இருந்தது. இப்பட ஹீரோ நிகில் தெலுங்கில் 10 படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் சுவாதி ஏற்கனவே தமிழில் நடித்திருக்கிறார். நாங்கள் ஜெயம் படத்தை தொடங்கியபோது முருகனின் வேல் படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். இப்படத்தையும் வேல் வைத்துத்தான் படமாக்கி இருக்கிறார்கள் என்றார். ராஜா பேசும்போது அவரது தந்தையும் தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன் மற்றும் பட குழுவினர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

SHARE