தயாரிப்பாளருக்கு நஷ்டத் தொகையை கொடுப்பதா நடிப்பதா அஞ்சலியின் முடிவு என்ன?

358

images (3)

மு.களஞ்சியம் தயாரித்து இயக்கும் ஊர் சுற்றி புராணம் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு 2013-ம் ஆண்டில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதேபோல் அப்படத்தில் 10 நாட்கள் நடித்து வந்த நிலையில், சொந்த பிரச்சனைகள் காரணமாக அவர் அப்படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.

இதனால் இப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான களஞ்சியம் கில்டு பொதுச் செயலாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அவர் ஒருவேளை, அப்படத்தில் நடிப்பை தொடர விரும்பாவிட்டால் அவரால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை அப்பட தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும் என்று கில்டு பொதுச்செயலாளர் ஜாக்குவார் தங்கம் அறிவித்துள்ளார்.

அப்படி இந்த படத்தை முடிக்காமல் அஞ்சலி வேறு படங்களில் நடித்தால், தமிழ் மட்டுமின்றி வேறு எந்த மொழிகளிலும் நடிக்க முடியாத அளவுக்கு அனைத்து சினிமா சங்கங்களுக்கும் கில்டு சார்பில் புகார் அனுப்பப்படுமாம்.

அதேசமயம் இப்படத்தில் நடிக்க முன்வந்தால் அஞ்சலிக்கு முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் கொடுக்கப்படும் என்று கூறினார்.

அதனால் இனி அஞ்சலிதான் முடிவு செய்ய வேண்டும்.

நடிப்பா? அல்லது நஷ்டஈடா?

 

SHARE