தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

30

 

சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஞானவேல் ராஜா. இவருடைய ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் இதுவரை பல வெற்றி திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

நான் மகான் அல்ல, மெட்ராஸ், சிறுத்தை, இறைவி, காதலும் கடந்து போகும் போன்ற நல்ல திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவிற்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சூர்யாவின் கங்குவா மற்றும் விக்ரமின் தங்கலான் என இரண்டு மிகப்பெரிய திரைப்படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த இரு திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஞானவேல் ராஜாவின் குடும்பம்
இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை ஞானவேல் ராஜா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவுமே வெளிவராத நிலையில், தற்போது மனைவி மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE