தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

206

 

இளம் தாய் ஒருவர் கொடூர செயற்பாடு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, மஹாபாகே பிரதேசத்தில் நேற்று 9 மாத குழந்தையை காணவில்லை என தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அவர் வசித்த வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட குழந்தை
மேலதிக விசாரணையின் போது, ​​குழந்தையை கிணற்றில் வீசி தாயே கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, கொலை தொடர்பில் குழந்தையின் தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ராகம – ஹலந்துருவ வீதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE