தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயம்

445
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரசி ஆலைக்கு முன்பாக வானும் எல்வ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பியவர்களே இவ்வாறு விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதுடைய அரிகரன் என்பவரே உயிரிழந்ததுள்ளார்.

மேலும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TPN NEWS

 

SHARE