திருமணத்துக்கு பிறகு ‘லிப் டு லிப்’ காட்சியில் நடித்த ஆர்த்தி 

359 திருமணத்துக்கு பிறகு லிப் டு லிப் காட்சியில் நடித்தார் ஆர்த்தி அகர்வால்.தமிழில் ‘பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் டோலிவுட் நடிகர் தருணுக்கும் காதல் என்று கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த சிலவருடங்களுக்கு முன் மனம் உடைந்த ஆர்த்தி தனது வீட்டில் பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததில் உயிர் பிழைத்தார். பின்னர் அமெரிக்க வாலிபர் உஜ்வால் குமார் என்பவரை மணந்து வாழ்க்கையில் செட்டிலானார்.

இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.

 

வழக்கமாக திருமணத்துக்கு பிறகு நடிகைகள் நடிப்புக்கு முழுக்கு போடுவதுண்டு. அப்படியே நடித்தாலும் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் ஆர்த்தி அகர்வால் துணிச்சலாக கிளாமர் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். தற்போது டோலிவுட் படமொன்றில் முகுல் தேவ்வுடன் நடித்து வருகிறார். இப்படத்துக்காக சமீபத்தில் முத்தக்காட்சி படமானது. ஹீரோவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஆர்த்தி. அப்படங்கள் இணைய தளத்தில் வெளியாகி, மற்ற ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது

 

SHARE