திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் தாலியை கழற்றி வீசிய மணப்பெண்ணால் பரபரப்பு

496
ஆந்திராவில் திருமணம் முடிந்த 1 மணிநேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று மணப்பெண் தாலியை கழற்றி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே ஹிண்டலு கொப்பாலு கிராமத்தை சேர்ந்தவர் ராமே கவுடா. இவரது மகள் ராஜம்மா ( 22). இவருக்கும், ஹொலேநரசிபுரா தாலுகா நேரலே கிராமத்தை சேர்ந்த லிங்கேகவுடா என்பவரின் மகன் மகேஷ்(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.ஆனால் ராஜம்மா வேறு ஒருவரை காதலித்து வந்ததால் இந்த திருமணமத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனாலும் அவரது பெற்றோர், ராஜம்மாவை வற்புறுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலையில் ஹொலேநரசிப்புராவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மண்டபத்தில் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு மணி நேரத்தில் மணமகள் ராஜம்மா, ஹொலேநரசிப்புரா பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு தன் தாலியை கழற்றி எறிந்துவிட்டு, தனக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், என்னை வற்புறுத்தி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார், இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில், ராஜம்மாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை மகேசுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தினார்கள். ஆனால் ராஜம்மா மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று பிடிவாதமாக கூறியுள்ளார்.

இதற்கிடையே மணமகன் மகேஷ், தன்னை பிடிக்காத பெண்ணுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிவிட்டார். இதையடுத்து பொலிசார் இரு வீட்டாரிடமும் வாக்குமூலம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.

SHARE