திருமண வாழ்க்கை போர்: மீண்டும் நடிக்க வந்தார் நிஷா அகர்வால் 

478
காஜல் அகர்வால் தங்கை மீண்டும் நடிக்க வந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பேன் என்று அமலாபால் அதிரடியாக அறிவித்ததற்கு அவரது வருங்கால கணவர் விஜய் உள்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ‘திருமணத்துக்கு பிறகு குடும்பம்தான் முக்கியம். நல்ல வேடங்கள் வந்தால் மட்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்று பல்டியடித்தார் அமலாபால். ஆனால் திருமணம் முடிந்த பிறகு நடிக்க வந்திருக்கிறார் மற்றொரு இளம் நடிகை. காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.
   இஷ்டம் என்ற தமிழ் மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பெரிய வாய்ப்புகள் கைகூடாததையடுத்து மும்பை தொழில் அதிபர் கரண் வலேச்சா என்பவரை கடந்த ஆண்டு மணந்தார். திருமணம் ஆன ஒரு வருடத்துக்குள் நிஷா அகர்வால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஜானி ஆண்டனி இயக்கும் ‘பஹையா பஹையா‘ என்ற மலையாள படத்தில் அவர் தற்போது நடிக்கிறார். இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா? என்பதுபற்றி கேட்டபோது, அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று நிஷா தெரிவித்தார். திருமண வாழ்க்கை போர் அடித்துவிட்டதாலே அவர் நடிக்க வந்திருப்பதாக நிஷாவின் தோழிகள் தெரிவித்தனர்.
SHARE