யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கைகால் பொருத்தும் நிலையம் பேருதவியாக அமையும்.
அமைதிகரங்கள் திறப்பு விழாவில் வட மாகாண சுகாதார அமைச்சர்
கடந்தகால 30 வருட யுத்தத்தினால் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உளவளத்துணை மற்றும் செயற்கை அவயவங்கள் பொருத்துவதற்கான இந்த செவை நிலையம் வன்னிப்பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதானது பாராட்டுதலுக்குரியது என வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மாங்குளம் பிரதேசத்தில் லெபெறா நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட அமைதிகரங்கள் நல்வாழ்வு நிறுவன கட்டிடத்தை இன்று 5.5.2014 திறந்துவைத்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
முடிந்துபோன கொடிய யுத்தம் எம்மவர்களை அனைத்து வழிகளிலும் பாதித்துள்ளது. உயிரை மாய்தவர்களைவிட கொடிய வடுக்களை சுமந்து இன்றும் வேதனையை அனுபவித்துவருகிறார்கள். மனஉழைச்சலுக்குள்ளானதுடன் பலர் தமது அவயவங்களையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்களை கைதூக்கி விடவேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது என்றார்.
இந்த நிறுவனமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடல் நல சிகிச்சை, உளவள சிகிச்சை, பொருளாதார உதவிகள், கல்வி சார் உதவிகள் மற்றும் ஆண்மீக ரிதியிலான் உதவிகளை செய்யவுள்ளது.
இந்த நிகழ்வில் அமைலமரித்தியாகிகள் சபையின் வடமாகாண குருமுதல்வர்,அருட்தந்தைகள் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லிமெல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.