திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து தயாசிறி மற்றும் அனுரவிடம் விசாரணை

343
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஊடக சந்திப்பு குறித்து முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பிலான ஆவணங்களையும் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகச் சந்திப்பில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த ஊடகச் சந்திப்பில் தயாசிறி ஜயசேகரவும், அனுரபிரியதசர்ன யாபாவும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த காரணத்தினால் அவர்களிடமும் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்த ஏமாற்றியமை மற்றும் ஜனாதிபதி தேர்தலை சுயாதீனமான முறையில் நடாத்த இடையூறு ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE