தீபாவளிக்கு 3 படங்கள் ரெடி 

358

 

 தீபாவளிக்கு 3 படங்கள் மோதலுக்கு தயாராகின்றன.தீபாவளி என்றதும்  ரசிகர்கள் தங்களின் பேவரைட் ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதா என்றுதான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ‘கத்தி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயின். ஏற்கனவே முருகதாஸ், விஜய் இணைந்து உருவாக்கிய ‘துப்பாக்கி‘ கடந்த ஆண்டு ஹிட் ஆனது. ‘கத்தி‘ வெளியிடுவதற்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதற்கு விஜய், முருகதாஸ் மற்றும் பட தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஹரி இயக்கும் படம் ‘பூஜை. விஷால் ஹீரோ. அவருடன் முதன்முறையாக இணைகிறார் ஸ்ருதி ஹாசன். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ படம் பெரும்பகுதி பணிகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே தீபாவளி தினத்தில் இப்படமும் வெளிவர வாய்ப்பிருப்பதாக இதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் தரப்பில் கூறப்படுகிறது
SHARE