தீபிகாவின் ஆபாச படத்துக்கு தடை 

366
 தீபிகா படுகோன் நடித்த திரில்லர் படத்தை டிவியில் திரையிட தடை விதிக்கப்பட்டது.சைப் அலிகான், தீபிகா படுகோன், அனில்கபூர்,
ஜாகுலின் பெர்னான்டஸ் நடித்த படம் ‘ரேஸ் 2Õ. கடந்த ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. பின்னர் பல முறை டிவி சேனல்களில் ஒளிபரப்பானது. ஆனால் தூர்தர்ஷனில் இப்படத்தை திரையிட தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை. இதற்கு காரணம் படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்று இருப்பதுதான்.
காட்சிகள் வெட்டப்பட்ட பிறகும் இப்படத்தை சேனலில் ஒளிபரப்ப இயலாது என கூறிவிட்டனர். இந்நிலையில் படத்தை தூர்தர்ஷனில் திரையிடுவதற்கு ஏற்ப சான்றிதழ் கேட்டு மறுஆய்வு கமிட்டி, நடுவர் குழு போன்றவற்றில் தயாரிப்பாளர் முறையிட்டும் அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி பட தயாரிப்பாளர் ரமேஷ் துராணி கூறும்போது, ‘தூர்தர்ஷனில் படம் திரையிட யு சான்றிதழ் அவசியம்.
அதை தணிக்கை குழு தர மறுத்துவிட்டது. இதனால் எனக்கு தூர்தர்ஷன் மூலம் கிடைக்க வேண்டிய சிறிய அளவிலான தொகை இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக என்னால் வேறு எதுவும் செய்ய இயலவில்லைÕ என்றார். இதுபற்றி தணிக்கை குழு தலைமை அதிகாரி ராகேஷ்குமார் கூறும்போது,‘ரேஸ் 2 படம் தூர்தர்ஷனில் திரையிடப்படாதுÕ என்றார்

 

SHARE