தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலி

11

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வேனில் தீப்பிடித்தது.

தீ பரவுவதற்கு முன் இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

maalaimalar

SHARE