துண்டு பிரசுரம் TNA க்கு எதிராக மட்டக்களப்பில்

741

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொய்யான வாக்குறுதிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிப்பட்டிருக்கின்றன.

அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடக்கு கிழக்கு மாகாண மக்களின் காணிகள் தொடர்பாக குரல் எழுப்பும், ஒரே ஒரு அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என மக்களிடம் பொய் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களுள் எஸ்.யோகேஸ்வரன், பி.அரியநேத்திரன், மற்றும் பொன்.செல்வராசா ஆகியோர் இன்று கிழக்கு மக்கள் மத்தியில் பொய் காரர்களாக விளங்கியுள்ளார்கள்.

ஐயங்கேணி பகுதியிலுள்ள நரசிம்ம வைரவர் கோவிலின் முன்னால் உள்ள காணி தொடர்பாக பிரச்சினையை பேச்சுவார்ததை மூலம் தீர்ப்பதற்கு மக்கள் ஒன்று திரள்வதை அறிந்த எஸ்.யோகேஸ்வரன் உட்பட அவரது பாராளுமன்ற குழுவினர் அந்த இடத்திற்கு சமூகமளித்து வழமைபோல் மீட்பாளர்களாக காட்சியளித்தார்கள்.

அன்று படம் ஒட்டிச் சென்றவர்கள், இன்றுவரை ஐயங்கேணி மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கோ, அது குறித்து தேடிப்பார்ப்பதற்கோ இதுவரை முன்வரவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின், பொய்யான வாக்குறுதிகளையும் ஏமாற்று நாடகங்களையும், நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் மக்கள், அதைத் தீர்க்கும் வழியையும் கண்டு விட்டார்கள்.

அதுதான் ஆளும் கடசியின் கல்குடா அமைப்பாளர் சந்திரபால ஊடாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் முன்வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஐயங்கேணி பிரதேசத்தில் அளும் கடசியின் அலுவலகம் ஒன்றைத் திறக்குமாறு அப்பிரதேச மக்கள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் கேட்டுள்ளனர்.

இதன் மூலம் தெரியவருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன் உள்ளிட்ட பொய் நடிகர்களை மக்கள் வெறுத்து விட்டார்க்ள என்பது புலனாகின்றது.

மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி அப்பாவி மக்களின் பெறுமதியான வாக்குகளை சூறையாடி நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவியுள்ள இவர்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஒருநாளும் முன்வரவில்லை. முன்வரவும் மாட்டார்கள்.

யோகேஸ்வரன் உள்ளிட்ட இவர்கள் சுய நலத்துடனும் சுகபோகத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. எனவும் கூறப்பட்டுள்ளது .

இவ்வாறு  அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

SHARE