துபாய் கோல்ப் கிளப்பில் சச்சினுக்கு அந்தஸ்து

741
துபாய் கோல்ப் கிளப்பில் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.துபாயில் உள்ள புகழ்பெற்ற கோல்ப் அமைப்பான எல்ஸ் சச்சினுக்கு தனது அமைப்பின் நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது பற்றி பேசிய அவ்வமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் பல்க்கானாஸ் கூறுகையில், விளையாட்டு உலகத்திற்கு சச்சின் செய்த பங்களிப்பு மகத்தானது.அவரது சாதனைகளை பாராட்டி இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த சிறப்பு உறுப்பினர் அந்தஸ்து பட்டியலில் சச்சினுடன் முன்னாள் முண்ணனி கோல்ப் வீரர் ரோரி மெக்லராய், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மற்றும் மான்செஸ்டர் அணியின் முன்னாள் கோல்கீப்பர் பீட்டர் ஷெமிசெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

SHARE