துருக்கி சுரங்க விபத்தில் சாவு எண்ணிக்கை 299 ஆக உயர்வு

530

 

துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல் தீயில் கருகி இறந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏராளமான சடலங்கள் வெளியில் எடுக்கப்பட்டன.

நேற்று இரவு மேலும் 15 உடல்கள் வெளியில் எடுக்கப்பட்டன. இதன்மூலம் சாவு எண்ணிக்கை 299 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் சுரங்கத்திற்குள் இருக்கலாம் என்றும், 4 நாட்கள் ஆகிவிட்டதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே சுரங்க உரிமையாளர்கள் மற்றும் பிரதமரைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை விரட்டியடித்தனர்.

SHARE