துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 120-க்கும் அதிகமானோர் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வெடிவிபத்து காரணமாக சுரங்கத்தில் ஒரு பகுதி சேதமடைந்து மூடிவிட்டதால், அங்குள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
துருக்கி பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எனினும், தொழிலாளர்களை உயிருடன் மீட்பது இனி கடினம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.