கடத்தப்பட்ட குழந்தையின் தாய் மோனிஷாவும், தந்தை வசூதரனும் முரண்பாடு   வவுனியாவில் கடந்த 31-05-2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02-06-2018 இரவு 8.30மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிஸாரால் அழைத்து வரப்பட்டனர். வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் கடந்த 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை...
விசா இன்றில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து கடையொன்றில் பணியாற்றி வந்த இந்திய பிரஜையொருவர் நேற்று மோதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள குறித்த பிரஜை விசா இன்றி நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கடையொன்றில் பணியாற்றி வந்துள்ள நிலையில் மோதரை பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்மாவத்தை பகுதியிலேயே குறித்த நபர் சட்டவிரோதமான...
சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள், 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர்...
உலகின் பிரபல வீடியோ ஷேரிங் தளமாக யூடியூப் இருக்கிறது. ஒரு வீடியோவை பார்க்க துவங்கினால் குறைந்தபட்சம் சில மணி நேரங்களை  காவு வாங்கி, உங்களை தொடர்ந்து வீடியோ பார்க்க தூண்டும் தளமாகவும் யூடியூப் இருக்கிறது. ஆனாலும் இந்த யூடியூப் சேனலுக்காக ரிஸ்க்  எடுத்த சில இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது. கடந்த 3-ம் தேதி அன்று கனடாவில் இருக்கம் ஷானன் நீர்வீழ்ச்சியில், பிரபல 'ஹை ஆன் லைஃப்' என்ற யூடியூப்...
சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமராக்களை...
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி 10.07.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியின் முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுலோகங்களில் எங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் இல்லை. உயர்தர வகுப்பிற்கான ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக ஆசிரியர்களை...
சுவசெரிய எனும் அவசர அம்பியுலன்ஸ் வண்டி சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவிருக்கும் இந்த அவசர அம்புலன்ஸ் சேவைக்குரிய இலக்கமாக 1990 கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி இந்தச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதால் வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்படவுள்ளன. அவற்றில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்பியுலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு...
இலங்கையில் மருந்து உணவுக்கட்டுப்பாட்டு சட்டம் அதாவது உணவு திருத்தச் சட்டம் இருக்கிறது. இதற்குக் கீழ் தான் பாமசிகள் இருக்கிறது. அதற்கு லைசன்ஸ் வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஒரு பாமசியை வைத்திருக்க முடியாது. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 06 மாதம் அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் அவகாசம் வழங்கப்படவில்லை. தொடர்ந்து நடத்தச் சொல்லி எனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை, ஏன் மத்திய சுகாதார அமைச்சுக்கும்...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் பிரேஸில் அணி தோல்வியடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள், வீரர்கள் சென்ற பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உலக கோப்பை கால்பந்து போட்டியில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி கால்இறுதி ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இந்த நிலையில் பிரேஸில் கால்பந்து...
எத்தியோப்பிய மற்றும் எரித்திரிய நாடுகளுக்கிடையிலான போர் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என இரு நாட்டுத்தலைவர்களும் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். எரித்திரிய தலைநகர் அஸ்மராவில் நேற்று  நடைபெற்ற இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 1998 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான எல்லை முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் சமாதான உடன்படிக்கை முழுமையாக செயற்படுத்தப்படவில்லை. அத்தோடு போர் தொடங்கியதிலிருந்து அயல் நாடுகளிடையே பதற்றம் காணப்பட்டது. அதேநேரம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக...