ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையதிற்கு அருகே தற்கொலைப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், படுகாயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த ஜே.சி. அலவத்துவல அதே அமைச்சுக்கான இராஜாங்க அமைச்சராகவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் பிரதி அமைச்சராக இருந்த லக்கி ஜயவர்தன நீர்வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளிக் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய  தயாநிதி  வசந்தகுமார்  எனும் குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. செங்கலடியிலுள்ள நகைக் கடை ஒன்றில் கணக்காளராக இவர் வேலை பார்த்து வந்துள்ளதோடு இவருக்கு 8 ஆம் தரத்தில் கற்கும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத்...
த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து சுமார் 15 வருடங்கள் வரை ஆகிவிட்டது. இந்நிலையில் த்ரிஷா தற்போதெல்லாம் மிகவும் கவனமாக தான் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார், இதில் பெரும்பாலும் சோலோ ஹீரோயின் படங்களாக தான் உள்ளது. தற்போது த்ரிஷா வேஷ்டி போல் ஒரு உடையை அணிந்து வந்தார், ஒருவேளை பெண்களுக்காக புது மாடல் வேஷ்டி இது தானோ என்று கேட்கும்...
சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் அகதிப் பின்னணி கொண்ட மாணவர்களை மிகக் குறைத்து மதிப்பிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. Applied Sciences and Arts Northwestern (FHNW) பல்கலைக்கழகம் மேற்கொண்ட SCALA என்னும் ஆய்வின் ஆசிரியரான Markus Neuenschwander தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் அகதிப் பின்னணி கொண்ட மாணவர்கள்குறித்து மிக குறைவான எதிர்பார்ப்புகளையே கொண்டிருப்பதாகவும், கணிதத்தைப் பொறுத்தவரையில்கூட மற்ற மாணவர்களைப் போன்ற முடிவுகளையே அவர்கள் காட்டினாலும்கூட அவர்கள்...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியலை...
விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட Finger Print இனை உருவாக்கியுள்ளனர். இதனை மொபைல் சாதனங்களில் கடவுச் சொல்லாக பயன்படுத்த முடிவதுடன், பயனர்களின் உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் என்பவற்றினையும் அறிந்துகொள்ள முடியும். இதற்காக மீள்தன்மை மற்றும் ஒளி ஊடுபுகவிடக்கூடிய வகையில் குறித்த Finger Print ஸ்கானர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தென்கொரியாவில் உள்ள Ulsan National Institute of Science and Technology இல் பணியாற்றும் விஞ்ஞானிகளே வடிவமைத்துள்ளனர். தற்போது பாவனையில் உள்ள பொத்தான் வடிவிலான...
உலகில் வாழ்வதற்கு மிக பயங்கரமான நாடுகளின் பட்டியலில் சிரியா முதலிடம் பிடித்துள்ளது. உலகின் 163 நாடுகளில் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வன்முறை, உள்நாட்டு கலவரம், அரசியல் நிலை உட்பட 23 காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இப்பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ளன. சிரியா ஆப்கானிஸ்தான் தெற்கு சூடான் ஈராக் சோமாலியா ஏமன் லிபியா காங்கோ  மத்திய ஆப்ரிக்கா குடியரசு ...
பண்டைய காலத்தில் இருந்தே சருமத்தை பராமரிப்பதற்கு மஞ்சள் பயன்பட்டு வருகிறது. மஞ்சளில் எண்ணற்ற அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. மஞ்சளில் அன்டி-செப்டிக் பொருள் அதிகம் நிறைந்திருப்பதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி சருமத்திற்கு மேலும் அழகு சேர்கின்றது. மஞ்சள் சரும அழகிற்கு எவ்வாறு உதவி செய்கின்றது என்று பார்ப்போம். மஞ்சளை நன்கு அரைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் இந்த ஒரு முறையினாலே...