வவுனியா - இலுப்பையடி பகுதியில் உள்ள வடிகாண்களில் வீசப்பட்டு காணப்படும் கழிவுகளால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். வவுனியா, இலுப்பையடி பகுதி சனநெரிசல் மிக்க பகுதியாகவும், அதிக வர்த்தக நிலையங்களை கொண்ட பகுதியாகவும் உள்ளது. அப்பகுதியில் உள்ள வடிகாணில் கழிவுகள் வீசப்பட்டுள்ளதுடன், அவை அகற்றப்படாமல் காணப்படுகின்றது. இதனால் அவ்வப்போது துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் வவுனியா நகரசபை கவனம் செலுத்தி அக்கழிவுகளை அகற்ற உடனடியாக...
கூட்டுறவுத்துறையின் அங்கத்தவர்களாக இருந்து தமது பணியின் போது மரணமடைந்த குடும்பஉறுப்பினர்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண மகளிர்விவகாரம், கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்து கொண்டு பணியின் போது மரணமடைந்த அங்கத்தவர்களுக்கானஇழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை குறித்தஅங்கத்தவர்களின் குடும்பத்தினரிடம் கையளித்தார்.       குருநகர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை சேர்ந்த எமிலியான் சியாங் என்பவருக்கான இழப்பீட்டுத் தொகையை சியாங் பெல்சியானாவும், ஏழுகடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தை சேர்ந்த யோகராசாகிசாந்தன் என்பவருக்கான இழப்பீட்டுத்...
இந்து கலாசார பிரதியமைச்சுப் பதவியிலிருந்து விலகி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக காதர் மஸ்தான் குறிப்பிட்டார். இந்து...
(மன்னார் நகர் நிருபர்)  கடந்த சில நாட்களாக தலைமன்னார் கடற்பகுதியில் வீசிய அதீத காற்று காரணமாக கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு  சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த   சகோதரர்களான இரு மீனவர்கள்  5 நாட்களின் பின் இன்று புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுத்தீவு கடற்;கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த வெள்ளிக் கிழமை (08) ஆம் திகதி தலைமன்னார்...
(மன்னார் நகர் நிருபர்) கடந்த நாட்களில் வறட்சி காரணமாக கிளிநொச்சியை சேர்ந்த பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன அநேகமான குடும்பங்கள் விவசாயம் மீன் பிடி மற்றும் தோட்டச்செய்கையில் பாரிய அளவில் நட்டத்தை எதிர் கொண்டனர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த அநேகமான மக்கள் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தங்களுடைய பெயர் விபரங்கள் மற்றும் நட்ட விபரங்களை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்திலும் பதிவு...
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கடும் காற்றினால் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் கிராமத்தில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதிக்கு உடனடியாக சென்ற தவிசாளரும் குழுவினரும், குறித்த பகுதிக்கு பொருப்பாக உள்ள அமைப்புக்களுடனும் அரச அதிகாரிகளுடனும் தொடர்பினை ஏற்படுத்தி நிலைமையை தெரியப்படுத்தினர். உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் அவ்விடத்துக்கு வருகைதந்து மக்களின்...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விடைபெற்று செல்லும் போது அவருடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாகவே இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் மஹிந்தவை சந்தித்த அடுல் கெசாப் “கோத்தபாய ராஜபக்ஜவின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியதாகவும், கோத்தா ஜனாதிபதியாக அமெரிக்கா விரும்பாது” எனவும் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், “அமெரிக்கா...
வவுனியா புளியங்குளம் இந்து கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 13.06.2018 அன்று மலேசியா கேம்பிறீச் பல்கலைக்கழக பயிற்சி ஆசிரியரும் UNFPA யின்  Youth4Youth இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் நடைபெற்றது.             இவ் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் UNFPA யின் Youth4youth வவுனியா மாவட்டத்தின் தலைவர் றெக்சன், தமிழ் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் பிரதீபன், குருநாகல் பல்கலைக்கழக மாணவன் நிவோதன், புளியங்குளம் இந்து...
தனது கை, கால்கள் முறையாக இயங்காமையினால் தனது அப்பாவின் உதவியுடன் பட்டகாட்டில் இருந்து சோளம் பொரி கச்சான் போன்றவற்றை விற்பனை செய்வதற்காக மக்கள் வங்கி வரை தன்னிடம் உள்ள மூன்று சில்லு சைக்கிளில் தந்தையின் உதவியுடன் தொழில் செய்து கொண்டு வருகிறார். இருந்தும் தனது போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எமது அமைப்புக்கு விடுக்கப்பட்டவேண்டுதலுக்கு அமைவாக நாம் எமது அமைப்பின் வலிந்துதவுதல் எனும் கோட்பாட்டிற்கு அமைவாக அவர்களின் இருப்பிடம் நாடிச்...
(பாலகிருஷ்ணன் திருஞானம்) வட மாகாணத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் போலியான இறப்பர் முத்திரைகள் ஊடாக பணம் பெற்றுக் கொண்டு பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு - உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவு. கல்வி அமைச்சின் அதிகாரிகளின் போலியான இறப்பர் முத்திரைகள் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய்கள் பணமாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வட மாகாணத்தில் பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பின் பொழுது முறைகேடுகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது....