இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பிரஜைகளுடன் மின்னஞ்சல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நிதி மோசடி தொடர்பில் பத்து முறைப்பாடுகள் இந்தண்டில் இதுவரையில் பதிவாகியுள்ளன. மேலும், இணையம் மற்றும் முகநூல்...
இலங்கை தீவின் வரலாற்றில் முதன் முறையாக இந்து விவகார அமைச்சின் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்துள்ளது இந்த நல்லாட்சியில் தான் என்பது பெரும் கவலைக்குரிய விடயம் என சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். (12.06.2018) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கட்கு இந்து விவகார பிரதி அமைச்சு வழங்கப்பட்டதையடுத்து அதனை கண்டிக்கும் முகமாக சிறி தமிழீழ விடுதலை...
(மன்னார் நகர் நிருபர்)  மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித எச்ச அகழ்வு பணியை  மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார். ஆயர் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுடன் உரையாடியது தொடர்பாக ஆயரிடம் வினவியபோது, நாங்கள் தற்பொழுது மன்னாரிலில் நடைபெறும் மனித எச்சங்கள் அகழ்வு பணியை மேற்கொள்ளும் இடத்துக்குச் சென்று சற்று தெரிந்து...
யாழ்ப்பாணம் - பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று இடம்பெற்ற நிலையில், வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் உற்சவத்தினை முன்னிட்டு நேற்று திருச்சொரூபம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன்போது வானில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலம் மலர் தூவப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.      
நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்பு அகழ்வு பணிகள் நேற்று  (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.          மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று  (12) செவ்வாய்கிழமை 12...
மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவற்குடா கிழக்கு, 4 குறுக்கு வீதி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசைநடன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி வெல்லாவெளி பொலிஸ்...
    பின்-காலனித்துவ இலங்கையில் பௌத்தம் மதமாகவன்றி அரசியலாகப்பார்க்கப்படும் நிலை தோன்றியுள்ளது. காலனித்துவ காலப்பகுதியில் நிலவிய அரசியற் சூழல் பௌத்தம் அரசியல் மயப்படுவதன் அவசியத்தை வேண்டி நின்றது என்ற உண்மை மறுப்பதற்கில்லை. எனினும் சமகால இலங்கையில் அரசியல் பௌத்தத்தின் இருப்பும்-தொடர்ச்சியும் சிறுபான்மை மக்களின் சுதந்திர இருப்பை அச்சுறுத்தும் ஒருவிடயமாகவே புரிந்து கொள்ளப்படவேண்டும். காலனித்துவ காலத்தில் பிரித்தானியர் மேற்கொண்ட பௌத்த அவமதிப்பு நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடியாகவே சிங்கள-பௌத்த தேசியவாதம் மேற்கிளம்பியது என்ற வரலாற்றுப்பாடத்தை...
  சின்னஞ்சிறு பாலகனின் தலையில் அரிவாளால் வெட்டுப்போடும் மாட்டு மௌலவி... கேட்டால் மார்க்க நம்பிக்கை மருத்துவ முறையாம். மாட்டுமந்தைக்கூட்டம்!!! இஸ்லாம் பொறுமையையும் சொல்கின்றது, போராட்டத்தையும் சொல்கின்றது. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால்...
முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன்  ஓட்டும் காரில் ஏறக்கூடாது இலங்கை முஸ்லிம் அரசியல் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டது, அங்கு பல்வேறு சிந்தனைகள்,கருத்துகள்,கட்சிகள்,ஆளுமைகள்,தனிமனிதர்கள் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அவ்ர்கள் ஒவ்வொருவரும் ஏற்படுத்திச்சென்ற தாக்கங்கள் எமது அரசியலில் இன்றும் இருக்கின்றன, இந்நிலையில் பல்லின சமூகசூழல் ஒன்றில் வாழும் எம்மைப்போன்ற ஒரு சமூகம் தனது அரசியல் நடந்தையில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவையுடையதாக...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தங்களுடைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் அரசியல் வாய்ப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடிய சொற்பமானவற்றையும் கூட பாழாக்கிக் கொண்டிருப்பது பெரும் கவலை தருகிறது. 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை இயலுமானதாக்கிய வாக்காளர்களுக்கு கொஞ்சமேனும் விசுவாசமில்லாத முறையில் ஜனாதிபதி சிறிசேன செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்கு படாதபாடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான தலைமைத்துவத்தை நிலைநிறுத்த முடியுமென்ற நினைப்பில் அவர் கானல்நீரின் பின்னால்...