ஜோர்ஜியா நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தான் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது பதவி விலகளை அறிவித்துள்ளார். அந் நாட்டில் இரு இளைஞர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டதையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இந்த சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி வந்த நிலையில் நேற்று...
தெஹிரானில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள 12ஆவது பொருளாதார ஒத்துழைப்பு கூட்டு ஆணையத்தில் பங்கேற்குமாறு இலங்கைக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஸாத் பதியூதீனை நேற்று முன்தினம் சந்தித்தபோது, இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் ஷேல் அமிரானி இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேநேரம் கடந்தத மாதம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெஹிரானுக்கு மேற்கொண்ட விஜயம் மிகவும் சிறந்தாகவும் பயன்மிக்கதாகவும் இருந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, 11ஆவது...
வவுனியாவில் அறநெறி கொடி மாதமும் திருஞானசம்மந்தர் குருபூசை தினமும் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. தேசிய இந்து அறிநெறி கொடி மாதமும் அறிநெறி விழிப்புணர்வும் இந்து கலாசார திணைக்களத்தால் நாடு பூராகவும் மே 30 தொடக்கம் யூன் 31 வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு  (13.06) இடம்பெற்றது. இதன்போது திருஞானசம்மந்தரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து குருபூசை தினம் கொண்டாடப்பட்டதுடன்,...
வட கொரியா தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாமல் அந்நாடு மீதான தடைகள் விலக்கிக் கொள்ளப்படமாட்டாது என அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பே தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் ஊடகவியளாலர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அணு திட்டங்களை கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டுள்ளது கிம் ஜாங்-உன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அவசரத்தை புரிந்து கொள்வார் என்று நம்புகிரேன். 2020ஆம் ஆண்டிற்குள் வட...
வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் ஐந்து பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை திருடிய பெண்மணி ஒருவர் ஆலயத்திலிருந்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் (13) இடம்பெற்றது. ஆலயத்திற்கு திருவிழாவிற்கு வந்திருந்த பெண்களிடம் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை நூதன முறையில் திருடிய பெண் ஒருவரை கையுமெய்யுமாக பிடித்த பக்தர்கள் குறித்த பெண்ணை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்தனர். திருவிழாவில் தங்கச்சங்கிலிகளை பறிகொடுத்த ஐந்து பெண்கள் பொலிஸ்நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளதுடன், ஆலயத்தின்...
நல்லாட்சி அரசாங்கம் ஒரு மாதம் பெற்றுக் கொண்ட கடனானது, மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் ஓராண்டில் பெற்றுக் கொண்ட கடன் தொகையை விடவும் அதிகமானது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் மஹிந்த அரசாங்கம் ஓராண்டில் பெற்றுக் கொண்ட கடன் தொகையை விடவும், நல்லாட்சி அரசாங்கம் கடந்த மே மாதம் கூடுதல் கடனைப் பெற்றுக் கொண்டுள்ளது என சிங்கள ஊடகங்களுக்கு...
(டினேஸ்) ஜனாதிபதி செயகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான மக்கள் கருத்தறியும் அமர்வு  திருமலை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.               இவ்வமர்வு ஆரம்பிப்பதற்கு முன்பாக திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவணஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றிணை முன்னெடுத்திருந்தனர் இதன் போது அமர்விற்காக சமுகமளிப்பதற்காக வருகை தந்திருந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சற்றுத் தாமதமாகவே  அமர்வு நடைபெறவிருந்த குறித்த மண்டபத்திற்கு வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அமர்வின்...
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்) பௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லீமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லீம் அமைச்சரை நியமித்திருக்கின்றார் என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்து விவகார பிரதி...
இந்து சமய விவகாரத்திற்கு பிரதியமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு அந்நியமனம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார். இந்த நியமனம் இலங்கை வாழ் இந்து மக்களை வேதனைப்படுத்தியுள்ளதோடு ஜனாதிபதியினால் இந்து மதம் அவமதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன் என அவர் புதன்கிழமை (13) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில்...
(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) எமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் வடக்கு கிழக்கையும் இழந்திருப்போம். நாம் மிகக் கவனமாக இல்லாவிட்டால் எமக்குத் தெரியாமலேயே எமது சமுதாயம் அழிந்து விடும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய...