தலைமுடி உதிர்வதை தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்க்கும் முறையாகும். உண்மையில் இந்த முறையின் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். செய்யும் முறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கை விரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின் முன்னும், பின்னும் என்று கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு 5-10...
ஸ்பெயின் நாட்டில் 100 மச்சங்கள் மற்றும் 500 தழும்புகளோடு பிறந்த பெண் தற்போது மொடலாக கலக்கி கொண்டிருக்கிறார். பளிச்சென்ற சிரிப்பு, ஜொலிக்கும் நிறத்தில் இருந்தால் மட்டும் தான் மொடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக என்னைப்போன்று சற்று வித்தியாசமாக பிறந்திருப்பவர்களும் மொடல் அழகியாகலாம் என கூறுகிறார் Alba Parejo. Congenital Melanocytic Nevus குறைபாட்டால் பிறந்தவர் Alba Parejo. அதாவது பிறப்பிலேயே உடலில் 100 மச்சங்கள் மற்றும் 500 பிறப்பு தழும்புகளோடு...
தோலில் ஏற்படுகிற நோய்களில் முதலிடம் பெறுவது தேமல் நோய். இது Malassezia furfur எனும் கிருமி மூலம் உண்டாகிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் அதிகமாக யாருக்கு ஏற்படும்? வியர்வை அதிகம் சுரப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு...
வாழ்க்கையில் ஒவ்வொருவருமே தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேலை, எதிர்காலம் என்று ஆர்வமாக இருப்பீர்கள் அல்லவா? ஆனால் அந்த தருணத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, சில நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். உணவில் கவனம் அன்றாடம் ஜங்க் புட் எனும் ஆரோக்கியம் குறைவான உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளின் ஆபத்தை தடுக்கலாம். க்ரீன் டீ க்ரீன் டீயில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள்...
தமிழகத்தில் கருகலைந்ததால் மனவேதனை அடைந்த பெண் திருமண நாளன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(28), இவருக்கு ராஜலட்சுமி(25) என்ற மனைவி உள்ளார். ராஜலட்சுமி கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2-ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜலட்சுமி கர்ப்பமானதால் பணிக்கு செல்லவில்லை. இதைத் தொடர்ந்து ராஜலட்சுமிக்கு திடீரென்று...
கிளிநொச்சி பல்லவராயன் கட்டுச்சந்தியிலிருந்து, அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தி வரைக்குமான பிரதான வீதி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீதியின் ஊடாக பயணிக்கின்ற வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி பூநகரி மன்னார் வீதியையும், ஏ-9 வீதியையும் இணைக்கின்ற பிரதான வீதியாகவும், மாவட்டத்தின் அதிக சனத்தொகையைக் கொண்ட கிராமங்களினதும், உப நகரத்தினதும் பிரதான வீதியாகக் காணப்படும் இந்த வீதியானது எவ்வித புனரமைப்புக்களும் இன்றி பாரிய...
புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றப்படும் நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் போன்றவர்கள் வடக்கில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றனர். இராணுவத்தை குற்றம் சுமத்தி, மக்களை தூண்டிவிடும் நாடகத்தை இனியும் நடத்தினால்...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கண்டி அஸ்கிரிய மைதானத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தி மீண்டும் இந்தியா நோக்கி இன்று காலை புறப்பட்டது. உத்தியோகபூர்வமாக இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு எம்.ஐ17 ரக உலங்கு வானூர்திகள் நான்கு வரவழைக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியா செல்வதற்கு கண்டியில் இருந்து புறப்பட தயாரான போதே குறித்த உலங்கு வானூர்தி பழுதடைந்திருந்தது. எனவே, அந்த...
கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்த ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நடத்தி வரும் கட்டடத்தின் குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில், ஹோட்டலை மீளவும் கையளித்து விட்டு முற்பணத்தை உரிமையாளர் கோரியுள்ளார். இதன்போது வாக்குவாதம் முற்றிய நிலையில்...
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் நடைபெற்ற இடமாகக் காணப்படுகின்ற ஜெயபுரம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் வன்னேரிக்குளம் தேவன்கட்டுக்குளம் ஆகிய பகுதிகள் யுத்த காலத்தின் போது அதிகளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்ட பகுதியாக காணப்படுகின்றன. இந்த நிலையில் மக்கள் மீள்குடியேறியிருக்கின்ற போதும் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது தேவன்கட்டு, பண்டிவெட்டிக்குளம்...