கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக மாற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற குறித்த காரியாலயத்தை அம்பாறைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஹிஸ்புல்லாஹ்விடம் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஆசிக் பதுருதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இராஜாங்க...
சர்வதேச அணிகள் விளையாடும் போது தான், டோனி, ஸ்மித் பகையாளிகள் தற்போது அவர்கள் அண்ணன், தம்பி என இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது 10-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் புனே அணி, ஆரம்பத்தில் தடுமாறியது, அதன் பின் சீனியர் வீரர்களின்...
அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியின் ஜெயசூர்யா- தரங்கா ஜோடி அடித்த சாதனையை முறியடித்துள்ளது. மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின. அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்தனர்....
புனே அணியைச் சேர்ந்தவரும், இங்கிலாந்து வீரருமான பென்ஸ்டோக்ஸ் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் 10-வது ஐபிஎல் தொடர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, அதாவது பிளே ஆப் சுற்று நடைபெற உள்ளது. அதன் படி இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை மற்றும் புனே அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்....
புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் புனே அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் செவ்வாய் இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். தோல்வி அடையும் அணி, இறுதி ஆட்டத்திற்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. புள்ளிகள் பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்த...
செவிலா அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, 2009 ஆம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராகவும்...
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy J7 Max இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 5.6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினை இக் கைப்பேசி கொண்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. தவிர தலா 13 மெகாபிக்சல்களை உடைய...
அன்ரோயிட் இயங்குதளத்தில் சில வசதிகளை பயன்படுத்த முடியாத நிலையில் அவற்றினைப் பெற்றுக்கொள்வதற்காக Root செய்வது வழக்கமாகும். எனினும் இந்த முறை அன்ரோயிட் விதிமுறைகளுக்கு முரணானதாக இருந்த போதிலும் இலவசமாக கிடைக்கும் இயங்குதளம் என்பதனால் பிரச்சினைகள் எதுவும் பாரிய அளவில் ஏற்படுவதில்லை. இருந்தும் முதன் முறையாக Netflix நிறுவனம் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது Root செய்யப்பட்ட அன்ரோயிட் கைப்பேசிகளில் தனது அப்பிளிக்கேஷன் இயங்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் சில நாட்களிலிருந்து...
உலகளவில் நடைபெற்றுள்ள இணைய தாக்குதலுக்கு பின்னர் மீண்டும் ரான்சம்வேர் போன்ற இணைய தாக்குதல்கள் நடைபெறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்துள்ளது? இத்தகைய தாக்குதல்களில் இருந்து நிறுவனங்களையும், தனி நபர்களையும் பாதுகாத்துகொள்வது எப்படி? இணைய தாக்குதலின் கனாகனம் என்ன? ரான்சம்வேர் என்பது கேட்கப்படும் தொகையை செலுத்துவது வரை கணினியிலுள்ள கோப்புக்களை பூட்டி வைத்துகொள்ளும் தீங்கான கணினி மென்பொருளாகும். இவ்வாறு இணைய தாக்குதல் நடத்துவது ஒன்றும் புதியதல்ல. ஆனால் மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் அளவுக்கு...
இந்திய முகாம்களில் புகலிடக் கோரிக்கையாளர்களாக இருந்த இலங்கையர்கள் இந்த மாதம் 23ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் 23ஆம் திகதி 53 பேர் நாடு திரும்பவுள்ளனர். இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் பல வருடங்களாக இருந்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். மேலும், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் உணவு ஆகிய செலவுகளை ஐக்கிய...