தொடர் தோல்வி…தெலுங்குக்குத் தாவினார் ராகுல் ப்ரீத்..!

462

‘புத்தகம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராகுல் ப்ரீத். அடுத்து இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘என்னமோ ஏதோ’ படமும் மாபெரும் தோல்வியடைந்தது. தமிழில் ஒரு நடிகைக்கு அடுத்தடுத்து சில படங்கள் தோல்வியடைந்தால், அவரை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்வதையே தவிர்த்துவிடுவார்கள். இப்படி இதற்கு முன் பல நடிகைகளுக்கு நடந்துள்ளது. இப்போது அந்த வரிசையில் ராகுல் ப்ரீத் இடம் பிடித்து விட்டார். இதனால் மிகவும் வருத்தமடைந்த ராகுல் ப்ரீத் தெலுங்குப் படங்களில் நடிக்க முடிவெடுத்து அங்கு சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராம், கோபிசந்த், மஞ்சு மனோஜ் ஆகியோர் நடிக்கும் படங்களில் ராகுல் ப்ரீத்தான் கதாநாயகி.
மிஸ் இந்தியா 2011 இறுதிப் போட்டியில் தேர்வானவரான ராகுல் ப்ரீத் சிங், ‘யாரியான்’ என்ற படம் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். ஒரு பக்கம் தமிழில் தோல்விப் படங்களில் நடித்தாலும், ராகுல் ப்ரீத்தை ஒரு விஷயம் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
பிரபல பத்திரிகை ஒன்று விரும்பத்தக்க 50 பெண்கள் பற்றி நடத்திய தேர்வு ஒன்றில் ராகுல் ப்ரீத்தும் இடம் பெற்றுள்ளார். அதோடு அடுத்த வருடம் 15 இடங்களுக்குள் ஒருவராகத் தேர்வு ஆவேன் என நினைப்பதாக இதுபற்றிக் கூறியுள்ளார் ராகுல் ப்ரீத்.
தமிழில் நடித்த படங்கள் தோல்வியடைந்தாலும், தெலுங்குத் திரையுலகம் தன்னை எப்படியும் கரை சேர்த்துவிடும் என்று நம்புகிறார். தமிழில் ஜொலிக்க முடியாத நடிகைகள் கண்டிப்பாக வேறு மொழிகளில் முன்னணி நடிகையாகிவிடுவார்கள் என்பது காலம் காலமாக நடந்து வரும் விஷயம்தான். அந்த ராசி தனக்கும் ஒர்க்-அவுட் ஆகும் என நம்புகிறார் ராகுல் ப்ரீத்.
SHARE