தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அதிரடி புரட்சி.

466
ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்க வல்ல பதில் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரித்து வருகிறது.

இந்த ஏவுகணைகளின் சோதனை கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் அவை இதுவரை வெற்றிகரமாக அமையவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அதன்படி நடுத்தர ரக கண்டம் விட்டு கண்டம் பாயும் போலி ஏவுகணை ஒன்றை, கலிபோர்னியா விமானப்படை தளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சோதனை முதல் முறையாக வெற்றி பெற்றிருப்பதன் மூலம், எதிரி நாட்டு ஏவுகணைகளை தரை சார்ந்த பகுதியில் இருந்து இத்தகைய ஏவுகணைகளை செலுத்தி அழிக்க முடியும் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏவுகணை தயாரிப்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு சிறந்த மைல்கல் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE