நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி

74

மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் பல ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் கொச்சியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்னசென்ட் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இன்னசென்ட் சில வருடங்களுக்கு முன்பாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தார். அன்றிலிருந்து புற்று நோய் குறித்த விழிப்புணர்வை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பொது இடங்களில் பேசி வந்தார்.

தன்னுடைய அனுபவத்தை ‘புற்று நோய் வார்டில் சிரிப்பு’ என்ற பெயரில் புத்தகமாகவே எழுதி பதிவு செய்திருந்தார். இது புற்று நோயால் ஏற்பட்ட மன அழுத்தத்தை எப்படி சமாளித்தார் என்பதை வெளிப்படுத்தியிருந்தது.

அவர் புற்று நோய் தாக்கத்தில் சிகிச்சை பெறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நோயின் தீவிரத்தால் தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

maalaimalar

SHARE